கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை

கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை

வரலாறு

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

FB_IMG_1701398431247.jpg
IMG-20231205-WA0022.jpg
IMG-20231205-WA0030.jpg

                                    கொழும்பு இந்து கல்லூரி இரத்மலானையின் வரலாற்று குறிப்புகள்

  • தோற்றமும் பின்னணியும்

தமிழர்களும் சிங்களவர்களும் வேறுபாடுகள் இன்றி அந்நியோண்ணியமாக வாழ்ந்து வந்த நிலை சுதந்திரத்துக்கு பின்னர் படிப்படியாக சீர் குலைய தொடங்கியது. இதற்கு பல்வேறு காரணிகள் காரணமாயினும் அவற்றை ஆராய்வது இங்கு அவசியமானது அல்ல. இச்சீர்குலைவின் பின்னணியில் தலைநகர் கொழும்பிலிருந்த பிரபல பாடசாலைகள் இந்து தமிழ் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கும் நிலை அதிகரிக்கத் தொடங்கியது. இவ் இக்கட்டான நிலையே தலைநகரில் இந்துக் கல்லூரியின் ஸ்தாபிப்பதற்கான அவசியத்தை உணர்த்தியது.'' மத அடிப்படையில் இந்து சிறுவர்களுக்கு கொழும்பு கல்லூரிகளில் இடம் கிடைப்பது அரிதாகி வந்த வேலையில் அக் கல்லூரி தலைமை ஆசிரியர்கள் ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்? உங்கள் மதப் பிள்ளைகளுக்கு நீங்களே கல்லூரிகளை அமைக்காமல் எங்களின் நாடி ஏன் வருகிறீர்கள்? என்று வெளிப்படையாக கேட்கத் தொடங்கிய காலகட்டத்தில் தான் நீதியரசர் நாகலிங்கம் போன்றவர்களுக்கு மாற்றமடைந்து வரும் சூழல் புலப்பட்டது. மனதில் உறுத்தியது. ஆங்கிலேயரின் நிழலில் வாழ்ந்த காலம் வேறு இனி வந்து கொண்டிருக்கும் அகங்காரர்களின் அரசாட்சி காலம் வேறுபட்டதொன்று என்பதை நீதியரசர் அவர்களும் அவருடன் தொடர்பு  வைத்த அத்தனை அறிஞர் பெருமக்களும் ஆளச் சிந்தித்து அறிந்து கொண்டனர்'' எனக் குறிப்பிடும் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் கூற்றை இவ்விடத்தில் நுணுகி மனம் கொள்வது பொருத்தமானது. நீதியரசர் நாகலிங்கம் அவர்களும் அவரை சார்ந்தோரும் முன்னர் இந்துக்களுக்கான கல்லூரி நிறுவப்படுவதை எதிர்த்து இரு இனத்தவரும் ஒன்றாக கற்பதையே விரும்பியவர்கள் என்பது கவனிக்க வேண்டியது. இத்தகைய பின்னணியிலே தலைநகரில் இந்துக் கல்லூரி அமைக்கும் முயற்சி கரு கொண்டது.

இந்துக்கல்லூரியை நிறுவும் முயற்சியின் ஆரம்பமாக இந்து வித்யா விருத்தி சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. நீதியரசர் சி. நாகலிங்கம் தலைமையில் 24 பிரமுகர்கள் இணைந்து இச்சங்கத்தை 05-02-1951 இல் நிறுவினர். இந்துக் கல்லூரியை தாவிப்பதில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வமும் காட்டிய அக்கறையும் எடுத்துக்கொண்ட முயற்சியும் அளப்பரியவை. ஆரம்ப வைபவத்தில் நிகழ்த்திய ஆரம்ப உரையில்" எங்களைப் பொறுத்தவரை எங்களால் இயன்றவரை எத்தகைய தியாகத்தையும் செய்ய வேண்டிய நேரினும் இலங்கையில் உள்ள எக் கல்லூரிக்கும் தரத்தில் குறையாது இணையாக கூடிய கல்லூரியை நிறுவ உழைப்போம்" என இந்து வித்யா விருத்தி சபையின் தலைவர் நீதியரசர் சி. நாகலிங்கம்  குறிப்பிட்டுள்ளமை மேற்படி ஆர்வத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது

நீதியரசர் சி .நாகலிங்கத்தை தலைவராகவும் செயலாளராக திரு. எஸ். மகாதேவன், பொருளாளராக திரு .கே. சச்சிதானந்த ஆகியோரையும் கொண்டு செயல்பட ஆரம்பித்த இந்து வித்யா விருத்தி சபை வேகமாக செயல்பட்டு பம்பலபிட்டி ஸ்ரீ கதிரேசன் ஆலய மடத்தில் 48 பிள்ளைகளுடன் 'பிள்ளையார் பாடசாலை' என்ற பெயரில் பாடசாலை ஒன்றை ஆரம்பித்தது. கொழும்பு இந்துக் கல்லூரிக்கு போடப்பட்ட' பிள்ளையார் சுழியே' பிள்ளையார் பாடசாலையாகும். கொழும்பு முதலாம் குறுக்குத் தெரு கதிர் வேலாயுத சுவாமி கோயில், பம்பலபிட்டி மாணிக்க விநாயகர் ஆலயம் ஆகியவற்றின் நம்பிக்கை பொறுப்பாளர்கள் சார்பில் மதராஸ் பழைய காட் கம்பெனியின் இயக்கப் பணிப்பாளர் அண்ணாமலை முதலியார் அவர்கள் பம்பல பெட்டியில் ஒரு ஏக்கர் காணியை இந்து வித்யா விருத்தி சபைக்கு வழங்கினார். 1951 மார்ச் மாதத்தில் இக் காணிக்கு பாடசாலை மாற்றப்பட்டு கணிஷ்ட பாடசாலையாக செயல்பட தொடங்கியது

பம்பலபிட்டியில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக இந்து வித்யா விருத்தி சங்கத்தினரின் கனவிற்கேற்ற விதமாக சிரேஷ்ட பாடசாலையாக கொழும்பு இந்துக் கல்லூரியை அங்கு நிறுவ முடியவில்லை. அந்நிலையில் அப்போதைய இரு பெரும் வர்த்தக ஸ்தாபனங்களான மகாதேவன் லிமிடெட், சிலோன் அன்ட் ஃபாரின் ட்ரேட்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் இயக்கப் படைப்பாளர்களான முறையே எஸ். மகாதேவன், கே.சி. தங்க ராஜா ஆகியோரின் முழு மனதான பிரயாத்தனத்தின் பேரில் இரத்மலானையில்  30 ஏக்கர் காணிக் கொள்வனவு செய்யப்பட்டது. மிக விஸ்தீரனமான அந்நிலப்பரப்பில் கொழும்பு இந்துக் கல்லூரியை இந்து தமிழ் சூழலில் நிறுவ இந்து வித்யா விருத்தி சங்கத்தினர் பெரும் முயற்சி எடுத்தனர்.  'HINDU' என்பதைக் குறிக்கும் விதமாக'H' வடிவில் இரு மாடி கட்டடத் தொகுதி ஒன்றை நிறுவும் திட்டமும், கல்லூரியின் வளாகத்தில் இந்து ஆலயம் ஒன்றை அமைக்கும் திட்டமும் அவர்களிடம் இருந்த பிரதான திட்டங்கள் ஆகும்.

இரத்மலானையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் 1953 ஆம் ஆண்டு ஆரம்பமாகின. அவ்வேளை போக்குவரத்து பகிரங்க வேலை அமைச்சராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் தளபதி சேர் .ஜோன் . கொத்தலாவல அவர்கள் புதிய கட்டடத்திற்கான அடிக் கல்லினை 02-05-1953 இல் நாட்டி வைத்தார். அதே ஆண்டில் பாடசாலையில் சிரேஷ்ட தராதர பத்திர வகுப்புகள்(S.S.C - இது இன்றைய  G.C.E(O/L) வகுப்புக்களுக்கு சமனானது) ஆரம்பிக்கப்பட்டன.'H' வடிவ கட்டடத் தொகுதியின் பகுதி வேலைகள் பூர்த்தி அடைந்த நிலையில் 1955இல் கொழும்பு இந்து கல்லூரி இரத்மலானையில் அமைந்திருந்த கொழும்பு இந்துக் கல்லூரியின் கனிஷ்ட பாடசாலையாக பம்பளபிட்டி பாடசாலை செய்யப்பட்டது. இரு பாடசாலைகளும் ஒரே அதிபரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கின. கல்லூரியின் முதல் அதிபராக செயற்பட்ட திரு. எஸ். பத்மநாதன் 1957 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். தொடர்ந்து திரு. N. சத்தியேந்திரா அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றார். துரிதமாக வளர்ச்சி அடைந்து வந்த கல்லூரியை இனக் கலவரங்கள் கணிசமான அளவிற்கு பாதித்தன

 

  • மலச்சிக்காலம்

இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட போதும் தன்னை சுதாகரித்துக் கொண்ட கல்லூரி புதிய வளர்ச்சிகளை நோக்கி பயணிக்க தொடங்கியது. திரு .டி. சுப்பிரமணியம் அவர்கள் 1959இல் அதிபராக கடமை ஏற்றார். நாட்டிலுள்ள பாடசாலைகளை தேசியமயமாக்கும் அரசாங்கத்தின் கொள்கை திட்டத்திற்கு அமைய 1961 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள ஒரு சில கல்லூரிகள் தவிர அனைத்து பாடசாலைகளும் அரசினால் சுவைகரிக்கப்பட்டு போது கொழும்பு இந்துக் கல்லூரியும் அரசுடுமையானது. 1962 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த திரு. டி. சுப்பிரமணியத்தை தொடர்ந்து திரு .எஸ். அம்பலவாணர் 1963ல் இருந்து 1967 வரை அதிபராக கடமை ஆற்றினார்.

கொழும்பு இந்துக் க

ல்லூரியின் 30 ஏக்கர் விஸ்தீரமான காணியில் 1967 ஆம் ஆண்டு கந்தவலை மகா வித்தியாலயம் அமைப்பதற்காக எட்டு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்தப் பெரியார்கள் அன்று நிறைவாக செய்த பணியினால் சகோதர இனத்தவரின் கல்வி வளர்ச்சிக்கும் இந்துக்கல்லூரியால் உதவ முடிந்துள்ளமையை இங்கு நினைவு கூறுதல் பொருத்தமானது.
 
இரத்மலானையில் அமைந்திருந்த சிரேஷ்ட கல்லூரிக்கான ஆரம்ப பாடசாலையாக இதுவரை இயங்கி வந்த பம்பலபிட்டி பாடசாலை 1968 ஆம் ஆண்டில் தனித்தியங்க ஆரம்பித்தது. படிப்படியாக சிரேஷ்ட வகுப்புகளை ஆரம்பித்துக் கொண்டு பத்மலானை கல்லூரி மற்றும் பெரியோர்களின் எதிர்ப்பை மீறி செயல்பட்டது. அத்தோடு அது கொழும்பு இந்துக் கல்லூரி என்ற பெயரையும் தனக்கு சூட்டிக்கொண்டது. இவ்விடத்தில் இரண்டு கொழும்பு இந்த கல்லூரிகள் உருவாகியமையை சுட்டிக்காட்டுதல் அவசியமானது.

இரத்மலாணை கொழும்பு இந்து கல்லூரியின் கனிஷ்ட பாடசாலை தனித்தியங்க தொடங்கியமையினால் கல்லூரியில் கனிஷ்ட வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அத்தோடு குறுகிய இட வசதி கொண்டிருந்த பம்பளபிட்டி பாடசாலை அதிகளவான வகுப்புக்களை தொடங்கி இருந்தமையால் இட நெருக்கடி காரணமாக கனிஷ்ட வகுப்புகளில் அனுமதி பெற முடியாது அதிக மானவர்கள் தவித்தனர். இத்தேவைகளை நிறைவு செய்வதற்காக இரத்மலானை இந்துக்கல்லூரி ஆரம்ப வகுப்புக்களையும் ஆரம்பித்துக்கொண்டது. விஸ்திரனமான இட வசதி இருந்தமையாலும் உயர் வகுப்புகளில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் மாணவர் எண்ணிக்கை குறைந்தமையாலும் இந்து தமிழ் சூழலில் கல்வி கற்கும் வாய்ப்பு பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டி இருந்தமையாலும் கல்லூரி மாணவிகளையும் இணைத்துக் கொண்டது. திரு .எஸ். அம்பலவாணர் அவர்களுக்குப் பின்னர் திரு.கே. சிவபாலன் அதிபர் ஆனார்.

 

  • பொற்காலம்

இரத்மலாணை கொழும்பு இந்தக் கல்லூரியை பொறுத்தவரை 1970 கள் காலப்பகுதியை பொற்காலம் என அழைப்பது பொருத்தமானதாகவே உள்ளது. இக்காலப் பகுதியில் கல்லூரி மிகச் சிறப்பாக இயங்கி வந்தமையை அறிய முடிகின்றது. கல்லூரியை நிறுவிய இந்து வித்யாபிவிருத்திச் சபையே 1961 ஆம் ஆண்டு கல்லூரி தேசிய உடமையாக்கப்படும் வரை கல்லூரியை நிர்வகித்து வந்தது. ஆனால் கல்லூரி தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் கல்லூரிக்கும் இந்து வித்யாபிவிருத்திச் இருந்த தொடர்பு இல்லாமல் போயிட்டு எனினும் 1970களின் நடுப்பகுதியில் இருந்து இந்து வித்யாபிவிருத்திச்  சங்கம் கல்லூரியில் அக்கறை காட்டத் தொடங்கியமை கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாகிற்று.

70களில் கல்லூரி சிறந்த முறையில் கல்வி பணியாற்றி வந்தது பொது பரீட்சைகளில் மாணவர்கள் மிகச்சிறந்த பெருபேருகளை  பெற்று உயர்கல்வி வாய்ப்பை பெற்றனர்.  கல்வித்துறையில் மட்டும் இன்றி விளையாட்டு துறையிலும் கல்லூரி சிறந்து விளங்கியது . ஆண்களுக்கான துடுப்பாட்ட அணி, உதைப்பந்தாட்ட அணி, பெண்களுக்கான வலை பந்தாட்ட அணி ,இருபாலாருக்குமான ''ஹாக்கி'' அணிகள் மற்றும் மெய்வள்ளுநர் விளையாட்டுகள் என்பன சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வந்தன.

கல்லூரியின் வெள்ளி விழா 1976 ஆம் ஆண்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 09- 12- 1976 இல் நடைபெற்ற வெள்ளி விழா வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கையின் ஜனாதிபதி கௌரவ வில்லியம் கோபல்லாவ அவர்கள் கல்லூரியின் சிவகாமி மண்டபத்தை திறந்து வைத்தார்கள். இம்மண்டபம், மாணவர்களின் கலைத்துறை சார்ந்த திறமைகளை வளர்ப்பதற்கு தளமாய் அமைந்தது. திரு. கே .ஜெகநாதன் அவர்கள் வெள்ளி விழா காலத்தில் அதிபராக இருந்த பெருமைக்குரியவர். அவரைத் தொடர்ந்து திரு. ஆர். சச்சிதானந்தன் அதிபராக இருந்தார். 70 களில் பலரும் மெச்சும் வண்ணமும் வியக்கும் வண்ணமும் உயர்நிலையில் திகழ்ந்த கொழும்பு இந்த கல்லூரிக்கு கண் திருஷ்டி ஏற்பட்டதோ என்னவோ என்பதுகள், பெருஞ்சோதனைகள் காலமாக அமைந்து விட்டது.

  • இருள் சூழ் காலம்

கருப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் இலங்கை வரலாற்றின் கறை படிந்த பக்கங்களான 1983 இனக் கலவரங்கள் பலதரப்பட்ட தமிழ் மக்களையும் நிறுவனங்களையும் பாதித்தன. அக்கலவரங்களால் இரத்மலானை கொழும்பு இந்த கல்லூரிக்கு ஏற்பட்ட இழப்பு சொல்லி மாளாது.

கல்விப் பணியில் சிகரத்தில் இருந்த கல்லூரி அதல பாதாளத்துக்குள் தள்ளி வீழ்த்தப்பட்டது. நிறுவனர்களின் கனவும் அர்ப்பணிப்பாளர்களின் அரும் உழைப்பும் சிதைத்திடப்பட்டன. தலை நகரில் தலை நிமிர்த்து நின்ற தமிழர்களின் கல்விக்கூடம் முகவரியிலிருந்து தொலைந்து போனது. ஆம் 1983 ஜீலை இனக் கலவரங்களை அடுத்து கல்லூரி மூடப்பட்டது. திரு .எம். செல்வராஜா அவர்கள் அக்காலத்தில் அதிபராக இருந்தார்.

கல்லூரி மூடப்பட்டு ராணுவ முகாமாக மாற்றப்பட்டு விட்டமையால் அகதியான கல்லூரி கல்லூரியின் காணி உபகறப்பினால் வளர்ந்து நின்ற கந்தவளை மகாவித்தியாலயத்திற்கு இடம்பெயர்ந்து சில காலம் இயங்கியது. பின்னர் தெகிவலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இடம் மாற்றப்பட்டு பல்வேறு இன்னல்களையும் இடர்பாடுகளையும் அனுபவித்தவாறு இயங்கி வந்தது. திரு. எஸ் .வைத்தியநாதன் அவர்கள் அக்காலத்தில் அதிபராக கடமை ஆற்றினார். 1983இல் ஒரு இடம் பெயர்ந்தது முதல் 1992 இல் மீள்குடியேறும் வரையான காலம் ஏறத்தாழ 10 ஆண்டு காலப்பகுதி கல்லூரி வரலாற்றில் கண்ணீரும் கம்பளிலிருந்து இருள் சூழ்ந்த காலமாகவே கழிந்தது. பெரும் கோடீஸ்வரனாக வாழ்ந்த ஒருவன் இரவோடு இரவாக பெருந்தறிந்திரனாக மாறிவிட்டதற்கு ஒப்பாக கொழும்பு இந்துக் கல்லூரியின் வரலாற்றிலும் விதி விளையாடியது என கூறுதல் மிகையானது அல்ல.

  • மீளுயிர்ப்பு காலம்

தனக்கு சொந்தமான பெரும் நிலப்பரப்பும் கட்டிடமும் ஆக்கிரமிப்பாளரின் கையில் கிடந்து சீரழிய இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி தெகிவலையில் நொந்து நூலாகி கொண்டிருந்தது. கல்லூரியின் நிலத்தை மீட்டு கல்லூரிக்கு புது வாழ்வளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருந்தன. அவ்வேளையில் கல்லூரி அதிபராக இருந்த திரு. எஸ் .வைத்தியநாதன் ஓய்வு பெற 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கல்லூரியின் பொறுப்பை திரு. என் .மன்மதராஜன் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்விச்செல்வம் அளித்த அக்கல்லூரியில் அத்தருணம் கற்றுக் கொண்டிருந்த மாணவர்கள் வெறும் 25 பேர் மட்டுமே. கல்லூரியை பொறுப்பேற்ற நாள் தொடக்கம் அதனை பழைய சீரோடும் சிறப்போடும் பார்க்க வேண்டும் என்ற கனவோடு அதிபர் உழைத்தார். கல்லூரி நிலத்தை மீட்க பல தரப்பட்டோரும் அரும் பாடுபட்டனர்.

முயற்சி திருவினையாக்கியது. பலரின் வேண்டுகோளுக்கும் இணங்கி இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கௌரவ ரணசிங்க பிரேமதாச அவர்கள் கல்லூரியை பார்வையிட வந்தார். 15- 03 -1992 அன்று ஜனாதிபதியை கல்லூரிக்கு அப்போதைய கல்வி ராஜாங்க அமைச்சர் திருமதி ராஜ மனோகரி புலேந்திரன் சகிதமாக அப்போதைய கொழும்பு மாநகர பிரதி முதல்வர் திரு.கே. கணேசலிங்கம் அவர்கள் அழைத்து வந்தார்கள். நிலைமைகளை பார்த்தும் கல்லூரியின் தொன்மை சிறப்பை கேட்டும் அறிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் கல்லூரி வளாகத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். 1992 ஆம் ஆண்டு மே மாதத்தில் கல்லூரி கட்டிடம் அமைந்த பகுதி மட்டும் மீள ஒப்படைக்கப்பட்டது. விடுதி பகுதியும் கல்லூரி வளவில் ஒரு பகுதியும் தொடர்ந்தும் ராணுவத்தினரிடமே இருந்தன. காலப்போக்கில் 1996 ஆம் ஆண்டில் கல்லூரி வளாகம் பூரணமாக மீள ஒப்படைக்கப்பட்டது. இம்முயற்சிகளுக்கு அமைச்சர் எம். எஸ் .செல்லசாமி அவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினார். கல்லூரி வளாகத்தை மீள பெறுவதில் அதிபர் காட்டிய விடாமுயற்சியும் இந்து வித்யா விருத்தி சங்கம் அகில இலங்கை இந்து மாமன்றம் போன்ற நிறுவனங்களும் அரசியல் பிரமுகர்களும் வழங்கிய ஒத்துழைப்பும் இவ்விடத்தில் நினைவு கூற வேண்டியன.

கல்லூரி வளாகம் மீல ஒப்படைக்கப்பட்டதே தவிர அது பாவனைக்கு உகந்ததான சிறந்த நிலையில் இல்லை. அதே வேலை கல்லூரியை நிறுவிய ஸ்தாபகர்களின் கனவான 'H' வடிவ கட்டிடத்தின் ஒரு பகுதி மட்டுமே அதாவத 'T' வடிவான பகுதி மட்டுமே பூர்த்தி ஆகி இருந்தது. ஸ்தாபகர்கள் விரும்பியவாறு கல்லூரி வளாகத்தில் கோயிலும் அமைக்கப்பட்டிருக்கவில்லை. மாணவர் தொகையும் நூற்றுக்கு குறைவானதே. இவ்வாறான நிலையில் கல்லூரி சீராக்கும் எண்ணத்தோடு திரு. என். மன்மதராஜன் 1992 மே மாதத்தில் கல்லூரியை இரத்மலானைக்கு கொண்டு வந்தார். எனினும் திரு. எல் .திருச்செல்வம் அவர்கள் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டு 1995 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். அக்கால பகுதியில் வகுப்பறைகள் சீர் செய்யப்பட்டன. எனினும் இரண்டு ஆண்டுகள் கல்லூரியின் வளர்ச்சி தடைப்பட்டே இருந்தது.
இரத்மலானை கொழும்பு இந்து கல்லூரியை மீள பொளவுர செய்யும் உறுதியுடன் 1995 ஆம் ஆண்டில் திரு .என். மன்மதராஜன் அவர்கள் மீண்டும் அதிபர் ஆனார்கள். ஸ்தாபகர்களின் கனவுகளில் ஒன்றாக இருந்த கல்லூரி வளாகத்தில் ஆலயம் அமைத்தலை நடவாக்க அதிபர் விரும்பினார். விக்கிணங்கள் வேறறுக்கும் விநாயகனை கல்லூரி வளாகத்தில் கொலுவேற்றுவது அனைத்து காரியங்களையும் வெற்றி பெற வைக்கும் என்ற நம்பிக்கையோடு ஆலய திருப்பணிகள் ஆரம்பம் ஆகின.04-02-1996 அன்று ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய ஆலயத்தின் கும்பாபிஷேகம் 01-07-1999 இல் நடைபெற்றது.

'நம்பினோர் கைவிடப்படார்' என்ற முதுரைக்கிணங்க கற்பக விநாயகருக்கு அடிக்கல் நாட்டபட்ட அதே வருடத்திலேயே இராணுவம் கல்லூரி வளாகத்தை விட்டு பூரணமாக வெளியேறியது. ராணுவ வெளியேற்றத்தைத் தொடர்ந்து கல்லூரியின் புனரமைப்பு பணிகள் புது வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டன. சிதைந்து கிடந்த கல்லூரி வளமும் விளையாட்டு மைதானமும் மண் போட்டு நிறுவப்பட்டு செப்பனிடப்பட்டன. இத்தகைய புனரமைப்பு முயற்சிகளுக்கு அப்போதைய கொழும்பு தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் சி .வி. குணரத்ன போன்றோர் வழங்கிய ஒத்துழைப்புக்கள் மறக்கக் கூடியவை அல்ல. கல்லூரி மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு விஞ்ஞான கூடத்தினதும் நூலகத்தினதும் முக்கியத்துவம் உணரப்பட்டு அவற்றைக் கல்லூரியில் நிறுவுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக 1997 ஆம் ஆண்டில் விஞ்ஞான கூடமும் நூலகமும் அமைக்கப்பட்டன. 1998 ஆம் ஆண்டு தைப்பூச தினத்தன்று ராமகிருஷ்ணன் மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகணானந்தாஜி அவர்களால் கல்லூரியில் அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடந்துவந்தது.

கல்லூரியில் இலவச விடுதி ஒன்றை அமைத்து வரிய மாணவர்களினதும் கல்வி மேம்பாட்டிற்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்திற்கு அமைவாக கடும் முயற்சியின் பயனாக  விடுதிக்கான அனுமதி அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டது. கல்லூரியின் விடுதி கட்டிடம் புணரமைக்கப்பட்டு 15-03-1998 திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை இந்து மாமன்றம் இலவச விடுதிக்கான அனுசரணையை வழங்கியது. அத்தருணத்தில் கல்லூரி அதிபரும் ஆசிரியர்களும் இந்து மாமன்றத்தின் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு பூரண ஒத்துழைப்பு வழங்கினர். ஆண் மாணவர்களை மட்டுமே இவ்விடுதியில் அனுமதிக்க முடிந்தது. விடுதிக்குழு தலைவராக திரு. சின்னதுரை தனபாலா அவர்களும் செயலாளராக திருமதி வானதி ரவீந்திரன் அவர்களும் செயற்பட்டனர். இலவசவிடுதியை அமைக்கும் எண்ணத்திற்கு வித்திட்டு அதற்கான கரிசனையோடு செயல்பட்டு அமரர் கலாநிதி. வேலாயுத பிள்ளை அவர்களை இவ்விடத்தில் நன்றியோடு குறிப்பிடுதல் அவசியம் ஆகும். மாணவிகளுக்கும் இலவச விடுதி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்தினால் விளைந்த முயற்சிகள் காலப்போக்கில் பயன் தந்தன. அரசினால் சுவீகரிக்கப்பட்ட காணியின் ஒரு பகுதி இந்து வித்யா விருத்தி சங்கத்திற்கு மீள கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அக்கானியை அகில இலங்கை இந்து மா மன்றம் கொள்வனவு செய்து பெண்களுக்கான விடுதியை அமைத்தது. அந்த விடுதி' சக்தி இல்லம் ' என்ற பெயரில் 09-06-2002 இல் திறந்து வைக்கப்பட்டது. இன்று மாணவர்களும் மாணவிகளும் ஆக 200க்கும் அதிகமானோர் இலவச விடுதியில் வாழ்கின்றனர். பலர் பயன் பெற்று சென்றுள்ளனர். விடுதி மாணவர்களாக இருந்த பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினர். இந்திய புலமைப் பரிசில் பெற்று இந்திய நாட்டில் உயர் கல்வி பெற்றனர். மேலும் ஊடகவியலாளர்களாகவும் பட்டைய கணக்காளர்களாகவும் சட்டத்தரணிகளாகவும் பொறியாளர்களாகவும் மிளிர்கின்றனர். இலங்கை தலைநகரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச விடுதி அமைத்த முதல் கல்லூரி என்ற பெருமை இரத்மலானை கல்லூரியையே சாரும். இந்தப் பணியை ஈடுப்பாடோடு முன்னெடுத்த கல்லூரி அதிபரையும் அகில இலங்கை இந்து மாமன்றத்தினரையும்  வரலாறு நன்றியோடு நினைவுரும்.

கல்லூரி மாணவர்களின் இயல், இசை ,நாடக ஆற்றல்கள் வளர்க்கும் கலமாக கடந்த காலங்களில் கல்லூரியின் "சிவகாமி மண்டபம்" விளங்கியது. மீண்டும் அம்பண்டபம் புனரமைக்கப்பட்டு 1999இல் திறந்து வைக்கப்பட்டது. வாராந்த வழிபாட்டிற்கும் கல்லூரி மன்றங்களின் செயற்பாடுகளுக்கும் இம்மண்டபம் பயன்பட்டு வருகின்றது. நவீன தகவல் தொழில்நுட்ப உலகிற்குள் எமது மாணவர்களையும் அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக கணினி செயற்பாட்டறை இணைய வசதியுடன் 2023 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இன்றைய உலகில் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாணவர்களுக்கு நவீன நுட்பங்களின் ஊடாக ஆங்கிலத்தை போதிக்கும் முகமாக அமைக்கப்பட்ட ஆங்கில மொழி செயற்பாட்டு அறை 22-10 -2004 அன்று மேல் மாகாண முதலமைச்சர் கௌரவ ரெஜினால்ட் குறே அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் இவற்றால் பெரும் பயன் அடைந்து வருகின்றனர். 60 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரியை நிறுவிய ஸ்தாபகர்கள் "HINDU"  என்பதை குறிக்கும் முகமாக 'H'வடிவில் கட்டடம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருந்தனராயினும் 'T' வடிவ கட்டடத்தை அமைக்கவே முடிந்திருந்தது. அதிபர் பதவியேற்ற காலத்திலிருந்து அத்திட்டத்தை நிறைவு செய்ய பெரு முயற்சி எடுத்து வந்தார்கள். எனினும் 16 ஆண்டுகளாக முயற்சி கை கூட வில்லை." முயற்சி மெய்வருந்த கூலி தரும்" என்ற வள்ளுவன் வாக்கத்தினங்க பயன் விளைந்தது. இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அமைச்சர் கௌரவ ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் நிதியொதுக்கீட்டிற்கிணங்க
'H' வடிவ இருமாடிக் கட்டடத்தின் மீதிப்பணிகள் அரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லினை 08.05.2008இல் அமைச்சர் நாட்டி வைத்தார். சுமார் 60 ஆண்டுகால பழமை வாய்ந்த பழைய கட்டிடப் பாணியிலேயே மிகுதிக் கட்டடமும் அமைக்கப்படுவது சிறப்பான அம்சமாகும். கட்டடத்தின் கீழ்ந்தள வேலைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் முதலாம் மாடிக்கான வேலைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன

கொழும்பு இந்துக்கல்லூரியை சைவத்தமிழ் மணங்கமழும் பூஞ்சோலையாக அமைக்க வேண்டும் என்ற ஸ்தாபகர்களின் கனவைத் தன் சீரமேற் கொண்டு உழைத்து வரும் கல்லூர் அதிபர் திரு. ந. மய்மதராஜன்: அவர்களை கல்லூரி வரலாற்றில் மிருயிரப்புக்கால நாயகனாகச் சுட்டுவதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை. அதிபரின் இருபதாண்டுகால உழைப்பினால் கல்லூரி விரைந்து முன்னேறி வருகின்றது. ஸ்தாபகர்களின் மேற்கண்ட கனவை நனவாக்கும் நோக்கோடு விஸ்தாரமான ஆலயம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இத்தகைய விஸ்தாரமான ஆலயம் இலங்கையின் வேரெந்த கல்லூரி வளாகத்திலும் நமது அறிவிற்கு எட்டியவரை இல்லை. அதுமட்டுமன்றி சைவ தமிழ்ப்பெரியார்களின் உருவச் சிலைகளை கல்லூரி வளாகத்தில் நிறுவும் திட்டத்தில் முதற்கட்டமாக
இரத்மலானை, கொழும்பு இந்துக் கல்லூரி இன்று பிழியந்தலை கல்வி வளையத்தில் ஓர் முன்னணி பாடசாலையாகத் திகழ்கின்றது. க.போ.த(உ/த),க.பொ.த(சா/த) மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளில் கல்லூரி மாணவர்கள் விதந்து கூறத்தக்க பொறு பெயர்களை பெற்று வருகின்றனர். கல்லூரியின் மென்பந்து துடுப்பாட்ட (Cricket) அணியினர் 2008 ஆம் ஆண்டு மேல் மாகாணத்தின் பல பிரபல, தேசிய கல்லூரிகளையும் பின் தள்ளி மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றனர். கல்லூரியினால் தயாரிக்கப்பட்ட நாடகம் கொழும்பு றோயல் கல்லூரியினால் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் 2007 ஆம் ஆண்டு முதலாம் இடத்தை பெற்றது. தமிழ்த்தின, ஆங்கிலத்தில மற்றும் கணித, விஞ்ஞான போட்டிகள் போன்றவற்றில் கல்லூரி மாணவர்கள் வலய, மாகாண மட்டங்களில் பல பரிசீல்களை பெற்று வருகின்றார்கள். இவை சில வகை மாதிரிகளே ஆகும்.

கல்லூரியில் பல மன்றங்களும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன. தமிழ் மன்றத்தினரால் முத்தமிழ் விழா தரமிக்க விழாவாக வெள்ளத்தை ராமகிருஷ்ணன் மண்டபத்தில் நடாத்தப்பட்டு பலரது பாராட்டையும் பெற்று வருகின்றது. விஞ்ஞான மன்றம் ஆண்டுதோறும் கண்காட்சியையும், விஞ்ஞானத் தினத்தையும் நடத்துகின்றது. இஸ்லாமிய மன்றம் மீலாத் விழாவையும் கிறிஸ்தவ மன்றம் ஒளிவிழாவையும் நாடக மன்றம் நாடக விழாவையும் ஆண்டுதோறும் நடாத்துகின்றது. இந்து கல்லூரியாக இருந்த போதிலும் இஸ்லாமிய,கிறிஸ்தவ மாணவர்களுக்கும் சமய வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது சிறப்பான ஒரு விடயமாகும். கல்லூரியின் ஸ்தாபிதத்தில் பெரும் பங்கு வகித்த  நீதி அரசர் நாகலிங்கம். சேர் கந்தையா வைத்தியநாதன், திரு.சு மகாதேவன், திரு எஸ்.நடேசன் ஆகியோரின் பெயர்களில் இல்லங்கள் அமைக்கப்பட்டு அப்ப பெரியார்கள் நினைவு கூறப்படுவதோடு வருடாந்தம் இல்ல மெய்வளுனர் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.