வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் எல்லா வருடமும் போன்று இவ்வருடமும் சிறப்பாக நடந்து முடிந்தன. இவ் வருடமானது கோப்பையை வைத்தியநாதன் அணி சுவுகரித்துள்ளது. எமது பாடசாலையானது மாணவர்களுக்காக எல்லா வருடமும் இவ்வாறான இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கமாகும். காரணம் இவ்வாறான நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் மீள புத்துணர்வு அளிக்க முடியும் என எமது கல்லூரியினால் எண்ணி இவ்வாறான கலை மற்றும் உடல் ரீதியான போட்டிகள் வருடம் தோறும் நடைபெற்றே வருகின்றன.
பள்ளியின் அதிகாரப்பூர்வ வண்ணங்களாக கபிலம மற்றும் மஞ்சள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இந்த வண்ணங்கள் பள்ளி சீருடைகள், பள்ளி கொடிகள் மற்றும் பள்ளி நிகழ்வுகளின் அனைத்து அம்சங்களிலும் அடையாள வண்ணங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.