திரு .டி. சுப்பிரமணியம் அவர்கள் 1959இல் அதிபராக கடமை ஏற்றார். நாட்டிலுள்ள பாடசாலைகளை தேசியமயமாக்கும் அரசாங்கத்தின் கொள்கை திட்டத்திற்கு அமைய 1961 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள ஒரு சில கல்லூரிகள் தவிர அனைத்து பாடசாலைகளும் அரசினால் சுவைகரிக்கப்பட்டு போது கொழும்பு இந்துக் கல்லூரியும் அரசுடுமையானது. 1962 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த திரு. டி. சுப்பிரமணியத்தை தொடர்ந்து திரு .எஸ். அம்பலவாணர் 1963ல் இருந்து 1967 வரை அதிபராக கடமை ஆற்றினார்.1970களின் நடுப்பகுதியில் இருந்து இந்து வித்யாபிவிருத்திச் சங்கம் கல்லூரியில் அக்கறை காட்டத் தொடங்கியமை கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாகிற்று.