எமது பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் நமது பாடசாலையின் ஏனைய கல்வி நடவடிக்கைகளை போன்றே தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் பாடத்திற்கும் முக்கியத்துவம் அழித்த வருகின்றது.
காரணம் வரும் எதிர்காலம் ஆனது தகவல் தொடர் பாடல் உடன் கூடிய காலமாகவே காணப்படும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்களின் அறிவையும் ஆற்றல்களையும் வளர்க்கும் கடமை நமது பாடசாலைக்கு உண்டு.
நமது பாடசாலையில் தகவல் தொடர்பாடலின் ஆரம்பம் 2003 ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறாக எமது பாடசாலையின் வளர்ச்சியை போன்றே பாடசாலையில் தகவல் தொடர்பாடலும் வளர்ச்சியை கண்டது.
பிறகு 2023 ஆம் ஆண்டு எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் (06.12.2023) அன்று எமது பாடசாலைக்கு இரண்டு Smart boards இனை வழங்கி வைத்தனர். இவர்கள் (1968 & 1972 A/L batch ) மாணவர்கள் ஆவர். இவர்களில் வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் சார்பில் திரு. சிறி மல்காந்தன் ( B Sc - Colombo University graduated இலங்கைக்கு வருகை தந்திருந்த போது அவற்றை எமது பாடசாலைக்கு கையளித்ததோடு அதற்கான நன்கொடையை வழங்கி வைத்த அனைவரது சார்பிலும் நன்கொடையை பாடசாலைக்கு கையடழித்தார்.
இவ்வாறு எமது பழைய மாணவர்கள் எமக்கு செய்த உதவியினால் எமது பாடசாலையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் மென்மேலும் வளர்ச்சி கண்டுள்ளது. அன்று ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலையின் தொடர்பாடல் தொழில்நுட்பமானது இன்று இன்று வரை தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டு காணப்படுகின்றது. அவற்றுக்கு முக்கிய காரணம் இவ்வாறாக எமது பாடசாலையில் கல்வி கற்று பாடசாலையின் நலனுக்காக செயல்படும் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலையில் நலன் விரும்பிகளே ஆவர்.
இவ்வாறு எமது பாடசாலை தொடர்பாடல் தொழில்நுட்பமானது இன்னும் தீவிர வளர்ச்சி அடைந்து மாணவர்களுக்கு சிறந்த தொழில்நுட்பம் அறிவை பெற்றுக் கொடுக்கும் என்பது பொய்யாகாது.
பொறுப்பு ஆசிரியர்
திரு.சிவசுதன் |
திரு.பிரசாத் |
முகாமைதுவக்குழு
க.கவின்காந்த் |
பா. தனுஷ்க |
ருக்சான்தன் |
இளங்கோவன் |
சசிக்பவன் |
ரன்ஷிக |
ஷோபனா |
திஸ்மிலா |
